Thursday, 10 March 2016

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மார்ச் 11, 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 





இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் ஏப்ரல் மாதம் நடை பெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1.4.2016 அன்று பன்னிரண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் மார்ச் 11, 12-ம் தேதிகளில் தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையத்துக்குச் சென்று பதிவுசெய்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment